தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ என்ற மக்கள் நலத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டது குறித்து பிரபல நகைக்கடை நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் (Joyalukkas) நிறுவனம் முக்கிய செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் இந்த ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் பங்கெடுப்பதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நல்ல வாய்ப்பை வழங்கிய முதலமைச்சர் விஜய்க்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்திட்டத்தில் இணைந்ததன் மூலம் எங்களுக்கு எந்தவிதமான வியாபார அல்லது லாப நோக்கமும் இல்லை. முழுக்க முழுக்க ஏழை, எளிய மக்களுக்குச் சேவை செய்யும் நன்னோக்கிலும் சமூகப் பொறுப்புணர்வுடனேயே நாங்கள் இதில் பங்கேற்றுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்குக் வழங்கி விநியோகிக்கப்படும் தங்க மோதிரங்கள் அனைத்தும் 100% தூய்மையான ஹால்மார்க் (Hallmark) முத்திரையுடனும், எவ்வித சமரசமுமின்றி சர்வதேசத் தரத்துடனும் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்” என்றும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது. மக்களுக்கான நலத்திட்டத்தில் முன்னணி நகைக்கடை நிறுவனம் லாப நோக்கமின்றி இணைந்துள்ளது குறித்து சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.