இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர்ஸ் இணைந்து நடத்திய சமீபத்திய தேசிய அளவிலான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றால், நாட்டின் அடுத்த பிரதமராக மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்ற கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்களின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி 49 சதவீத மக்களின் ஆதரவைப் பெற்று முதலிடத்திலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 27 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக, தமிழகத்தைச் சேர்ந்த தலைவரான விஜய் 9 சதவீத வாக்குகளையும் ஆதரவையும் பெற்று தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
பிராந்திய அளவைத் தாண்டி தேசிய அரசியலிலும் தனக்கான செல்வாக்கை நிலைநிறுத்தி, முன்னணி தலைவர்களுக்கு மத்தியில் விஜய் 9% ஆதரவுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது இந்திய அரசியல் வட்டாரத்திலும், அவரது ஆதரவாளர்கள் இடையேயும் பெரும் ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.