தமிழகத்தில் த.வெ.க அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஒரு முக்கிய அரசியல் எச்சரிக்கையையும் நிலைப்பாட்டையும் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், “தவெக அரசின் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி தொடர்ந்து நீடித்தால் அதற்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குவோம்.
அதேவேளையில், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகச் செயல்பட்டாலோ அல்லது நல்லாட்சியில் தொய்வு ஏற்பட்டாலோ கண்டிப்பான முறையில் அதை எதிர்த்து வீதிக்கு வந்து போராடுவோம்” என்று மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலனை மையமாகக் கொண்டு செயல்படும் வரை மட்டுமே ஆதரவு நீடிக்கும் என்றும், அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி மக்கள் போராட்டங்களை நடத்தத் தயங்க மாட்டோம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள இந்த அதிரடி எச்சரிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.