நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதாக நடிகை விஜயலட்சுமி வெளிப்படையாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட விஜயலட்சுமி, “இனிமேல் என் முழு ஆதரவும் நாம் தமிழர் கட்சிக்கும், அண்ணன் சீமானுக்கும் தான். வரப்போகிற அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுகிறார் என்று தெரிகிறது. அதற்கு நான் நேரில் சென்று சீமானுக்கு முழு ஆதரவு கொடுத்துப் பிரச்சாரம் செய்யப் போகிறேன்” என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “அவர்கள் ஏதேனும் தவறுகள் செய்திருக்கலாம். ஆனால், எனது விஷயத்தில் நீதிமன்ற உத்தரவை (Court Order) சீமான் சரியாகப் பின்பற்றி நடந்து கொள்கிறார். அதனால் இனிமேல் சீமான் தேர்தலில் ஜெயிக்க வேண்டும்; மக்களுக்குப் பல நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்று எனது முழு மனதோடு அவரை வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக நிலவி வந்த சர்ச்சைகளுக்கு இடையே, விஜயலட்சுமி சீமானுக்கு ஆதரவாகப் பேசியுள்ள இந்த கருத்து சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.