தமிழகத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்குப் பட்டா வழங்கும் நில சிறப்பு வரன்முறை திட்டத்தை ஆகஸ்ட் 31 முதல் மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா தங்கு தடையின்றி வழங்கப்படும். குறிப்பாக, ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருந்து வரும் ஏழை எளிய மக்களுக்கு இந்த விதிகளின் கீழ் இலவசப் பட்டா வழங்கி வரன்முறை செய்யப்படும்.
அதேவேளையில், நீர்நிலைகள் அல்லது ஆட்சேபகரமான நிலப்பகுதிகளில் வசிப்பவர்களுக்குப் பாதுகாப்பான மாற்று இடங்கள் வழங்கிப் பட்டா வழங்கப்பட உள்ளது.
ஏழை எளிய மக்களின் சொந்த வீட்டுமனை கனவை நனவாக்கும் வகையில் இத்திட்டம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டிருப்பது, தமிழகத்தில் நிலமற்ற ஏழை மக்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.