2029 பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் கூட்டணிக்குள் முரண்பாடு எழுந்தால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், “2029 பாராளுமன்றத் தேர்தலில் பாரத பிரதமர் வேட்பாளர் எங்களுடைய தலைவர் ராகுல்காந்தி தான்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “ஒருவேளை தமிழக வெற்றிக்குகழகம் அதற்கு உடன்படவில்லை என்றால், தமிழக வெற்றி கழக அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும் எங்கள் பொறுப்புகளைத் துறப்போம்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்பதில் தமிழக வெற்றி கழகத்திற்கு உடன்பாடில்லை எனில், தவெக அரசு அமைச்சரவையில் உள்ள தங்களது 2 அமைச்சர் பதவிகளையும் உடனடியாக ராஜினாமா செய்வோம் என அமைச்சர் ராஜேஷ்குமார் பேசியுள்ள இந்த விவகாரம் கூட்டணிக்குள்ளும், தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.