சாதி பலமும் பண பலமும் படைத்தவர்கள் மட்டுமே ஆட்சியில் அமர முடியும் என்ற நிலையைத் தமிழகத்தில் தவெக ஆட்சி முற்றிலும் மாற்றியமைத்துள்ளதாகச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் களத்தில் நிலவிவந்த பழைய நடைமுறைகளை உடைத்து எறிந்து புதிய மாற்றத்தை இந்த ஆட்சி கொண்டுவந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “234 சட்டமன்ற உறுப்பினர்களையும் முன்னிலைப்படுத்தி, மக்களுக்கு எப்போதும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்போம் என முதல்வர் விஜய் அனைவரிடமும் சத்தியம் வாங்கினார்” என்ற காரசாரமான உண்மையையும் வெளிப்படுத்தினார்.
எளிய பின்னணி கொண்டவர்களுக்கும் மக்கள் சேவை செய்ய வாய்ப்பளித்துள்ளதோடு, மக்கள் பிரதிநிதிகள் நேர்மையாகச் செயல்பட முதல்வர் விஜய் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, தமிழக அரசியல் களத்தில் பெரும் வரவேற்பையும் பலத்த பாராட்டுகளையும் பெற்று வருகிறது.