“இளம் வயது திருமணத்தால் பாதிப்பு!”: பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த தவெக எம்.எல்.ஏ. சத்யா பேரவையில் கோரிக்கை!

சமீபகாலமாக இளம் வயது திருமணங்கள் அதிகரித்து வருவதால், இளம் பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாகப் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்று தவெக எம்.எல்.ஏ. சத்யா சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரவையில் இதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், இளம் வயதிலேயே திருமண பந்தத்தில் நுழையும் பெண்களின் உயர்கல்வி மற்றும் ஆரோக்கியமான எதிர்காலம் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்தார்.

பெண்களின் நல்வாழ்வையும் அவர்களின் சுயசார்பான முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, சட்டப்பூர்வ பெண்களின் திருமண வயதை தற்போதைய 18-ல் இருந்து 20 அல்லது 21 வயதாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சட்டப்பேரவையில் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இளம் பெண்களின் உடல் நலம் மற்றும் மனநலப் பாதுகாப்பை முன்னிறுத்தி தவெக எம்.எல்.ஏ. சத்யா எழுப்பிய இந்த முக்கியக் கோரிக்கை, சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது.

Leave a Comment