தமிழக அரசியல் களத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், நடிகர் ரஜினி நினைத்த உண்மையான அரசியல் மாற்றமோ வெற்றிடமோ இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் காரசாரமாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வெளியாகியுள்ள பதிவில், “காலம் என்ன சொல்லிச்சுன்னு கதறும் அணில்களே.. தலைவர் ரஜினிகாந்த் நினைத்த அரசியலை உங்களால் பண்ண முடியாது. நீங்க பண்ற அரசியல் அவருக்குத் தெரியாது. இதுதான் அரசியல்னா அவருக்கு இந்த அரசியல் தேவையும் இல்லை.
இங்க ஆட்சி தான் மாறியிருக்கு, காட்சி மாறல. தலைவர் ரஜினிகாந்த் நினைத்த அரசியல் வெற்றிடம் இன்னும் அப்படியே இருக்கு” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆட்சி அமைந்து மாற்றங்கள் வந்ததாகக் கூறப்பட்டாலும், ரஜினிகாந்த் முன்வைத்த கொள்கை சார்ந்த மற்றும் நேர்மையான அரசியல் மாற்றத்திற்கான இடம் இன்னும் காலியாகவே உள்ளது என்ற ரீதியில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அதிரடி கருத்துக்கள், இணையதளங்களிலும் சினிமா-அரசியல் ரசிகர்களிடையேயும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.