“புகார் எண்கள் அறிமுகம்!”: டாஸ்மாக் முறைகேடுகளைத் தடுக்கப் புதிய கட்டணமில்லா தொலைபேசி & வாட்ஸ்அப் எண்கள் வெளியீடு!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை பொதுமக்கள் உடனுக்குடன் தெரிவிக்கப் புதிய வாட்ஸ்அப் எண் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது, பார்களின் முறைகேடுகள் மற்றும் பிற புகார்களை நேரடியாக அரசு நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் 7397720230 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 889 2015 ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்கள் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், நுகர்வோரின் குறைகளைக் களைந்து முறைகேடுகளைத் தடுக்கவும் அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Comment