“பாட்டிக்கு ‘கூலிங் கிளாஸ்’ பரிசளித்த ‘முதல்வர் விஜய்'”: சின்னக்காவூர் பகுதி விவசாயிகளுடன் நெகிழ்ச்சியான சந்திப்பு – கூலிங் கிளாஸை அணிந்து மகிழ்ந்த மூதாட்டி!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சின்னக்காவூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், அங்குள்ள விவசாயக் குடும்பங்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, அப் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் எதிர்பாராத விதமாக முதலமைச்சர் விஜய்யின் கையைப் பிடித்து அன்போடு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்த மூதாட்டியின் பாசமான அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்குச் சென்ற முதலமைச்சர், குடும்பத்தினருடன் உரையாடி விவசாயச் சூழல்கள் குறித்துக் கேட்டறிந்தார்.

அப்போது, மூதாட்டியின் அன்பிற்கு நெகிழ்ந்த முதல்வர் விஜய், தான் அணிந்திருந்த ‘கூலிங் கிளாஸை’ (Cooling Glass) அவருக்குப் பரிசளித்தார். முதல்வரிடமிருந்து பெற்ற அந்தக் கண்ணாடி அணிந்து மூதாட்டி மகிழ்ச்சி பொங்கப் புன்னகைத்த காட்சி அப்பகுதி மக்களை நெகிழச் செய்தது.

விவசாயக் குடும்பத்தினரின் குறைகளைக் கேட்டறிந்ததுடன், மூதாட்டிக்குத் தனது கூலிங் கிளாஸைப் பரிசளித்து அன்பு பாராட்டிய முதலமைச்சர் விஜய்யின் இந்த எளிமையான அணுகுமுறையும் நெகிழ்ச்சியான சம்பவமும் இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகிப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Leave a Comment