“2 வாரம் வெயிட் பண்ணி பாருங்க சரியான தங்கம் விலை தெரியும்!”: அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்திற்கு பின் தங்கம் விலை சரியும் – பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கணிப்பு!

தங்கத்தின் தற்போதைய சந்தை நிலை குறித்துப் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கியப் பகுப்பாய்வு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

சந்தையில் தங்கம் விலை மாற்றமின்றி ஒரே சீராக (Flat) இருப்பதாகக் கருதப்பட்டாலும், உண்மை நிலை அதுவல்ல என்று தெரிவித்துள்ள ஆனந்த் சீனிவாசன், பொதுமக்கள் இன்னும் இரண்டு வாரங்கள் காத்திருந்து பார்த்தால் சரியான தங்கம் விலை நிலவரம் தெரியவரும் என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்க மத்திய வங்கியின் முக்கியக் கூட்டம் வரும் செப்டம்பர் 16-17 தேதிகளில் நடைபெற உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையிலேயே சர்வதேசத் தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படும் என்று விளக்கினார்.

வட்டி விகிதம் மாற்றமின்றி நிலையாக இருந்தால் தங்கத்தின் விலை லேசாகச் சரியும் என்றும், ஒருவேளை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் தங்கம் விலை மளமளவெனச் சரியும் என்றும் அவர் கணித்துள்ளார்.

தங்கம் வாங்குவதற்குத் திட்டமிட்டிருக்கும் சாமானிய மக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அவசரப்படாமல் செப்டம்பர் மத்திய பகுதியில் அமெரிக்க மத்திய வங்கி அறிவிக்கும் முடிவுகளுக்காகக் காத்திருப்பது நல்லது என்ற ரீதியில் ஆனந்த் சீனிவாசன் வெளியிட்டுள்ள இந்த நிதிசார்ந்த கணிப்பு, நுகர்வோர்கள் மற்றும் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Leave a Comment