“திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ்!”: விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

திமுக ஆட்சிக் காலத்தில் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், கடந்த திமுக ஆட்சியின் போது பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் முழுமையாகத் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

மக்களுக்காகவும் தங்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் எதிர்காலத்திற்கும் உறுதுணையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிவிப்பு, ஆசிரியர் சங்கங்கள், விவசாய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Leave a Comment