“இனி அவருக்கு பதில் இவர்!”: சட்டமன்றத்தில் அமைச்சர்களின் பதில்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கலாய்ப்பு!

சட்டமன்றத்தில் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் அமைச்சர்களின் போக்கைக் கிண்டல் செய்யும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சுவாரசியமாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

சட்டப்பேரவை விவாதத்தின் போது பேசிய அவர், “டிவி சீரியல்களில் நடிகர்கள் யாராவது விலகினால் ‘இனி அவருக்கு பதில் இவர்’ எனப் பெயர் போடுவார்கள்; அதேபோல் இங்கு முதல்வரைக் கேள்வி கேட்டால் அமைச்சர்கள் எழுந்து பதில் அளிக்கின்றனர்” என்று கலாய்த்தார்.

மேலும் தொடர்ந்த அவர், “வேளாண் துறை அமைச்சருக்குப் பதில் பொதுப்பணித் துறை அமைச்சர் என மாற்றி மாற்றிப் பதில் சொல்கின்றனர்” எனக் குறிப்பிட்டு அவை உறுப்பினர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

இருப்பினும், காவல்துறை தொடர்பான விவாதத்தின் போது தீவிரத்தன்மையைக் சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின், “காவல் துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்ற நம்பிக்கையில் நான் பேசுகிறேன்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த இந்த நகைச்சுவையான மற்றும் சுடச்சுட விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.

Leave a Comment