“திங்கள்கிழமை பதில் அளிப்பேன்!”: சட்டசபையில் ஓடி விட மாட்டோம் என்று பிராமிஸ் செய்ய வேண்டும் – முதல்வர் விஜய் கெத்து விவாதம்!

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு வரும் திங்கள்கிழமை விரிவான பதிலளிப்பதாக உறுதியளித்துள்ள முதலமைச்சர் விஜய், அதற்குப் பதிலாக எதிர்க்கட்சியினருக்குச் சுவாரசியமான நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.

சட்டப்பேரவை விவாதத்தின் போது பேசிய அவர், எம்.எல்.ஏ-க்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் தகுந்த விளக்கங்களை அளிப்பதாகத் தெரிவித்தார். “எம்.எல்.ஏ-க்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சட்டசபையில் திங்கள்கிழமை பதில் அளிப்பேன்; ஆனால் அன்று யாரும் ஓடி விட மாட்டோம் என்று பிராமிஸ் செய்ய வேண்டும்” என்று அவையில் புன்னகையுடன் கன்டிஷனாகக் கூறினார்.

அவையில் பதிலளிக்கும் போது எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்யாமல் முழுமையாக இருந்து பதிலைக் கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் பேசிய இந்த பேச்சு, சட்டப்பேரவையில் பெரும் சுவாரசியத்தையும் அரசியல் களத்தில் பரப்பரப்பையும் உருவாக்கியுள்ளது.

Leave a Comment