பிரதமரிடம் 2014-ல் கேட்ட கோரிக்கை!

கடந்த 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற போது, நக்ஸலிசத்தை முறியடித்து ஒழிக்குமாறு இணையவாசி ஒருவர் X (ட்விட்டர்) தளத்தில் விடுத்த பழைய கோரிக்கை பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாட்டில் நக்ஸலிசம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், அந்த பழைய பதிவை மீளப்பகிர்ந்து “It’s Done, bro…” என்று குறிப்பிட்டு இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகள் மூலம் நாட்டில் நக்ஸலைட்டுகளின் ஆதிக்கம் ஒடுக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோரிக்கையைச் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் பரவலாகப் பகிர்ந்து வருவது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Leave a Comment