சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஆனந்த், மாநில அரசின் தற்போதைய நிதி நிலைமை குறித்து வெளிப்படையாகப் பேசி ஆதரவு தெரிவித்துள்ளார்.
போராட்டக் களத்தில் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “முந்தைய ஆட்சியாளர்கள் கஜானாவையே காலி பண்ணிட்டு போயிட்டாங்க; இப்போது கஜானாதான் இருக்கு, ஆனா அதுல ஒன்னும் இல்ல. இருந்தாலும் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் முற்றிலும் நியாயமானதுதான்” என்று தெரிவித்தாா்.
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்கு அரசு முழு ஆதரவு அளிக்கும் அதே வேளையில், நிதியாதாரங்கள் சீரமைக்கப்பட்ட பின்னரே அனைத்துக் கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற முடியும் என்ற நிதர்சனமான சூழலை அவர் சுட்டிக்காட்டினார்.
மாநில நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டி தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் களத்தில் அமைச்சர் ஆனந்த் பேசிய இந்தக் கருத்துக்கள், தற்போதைய அரசின் நிதி நிலைமை குறித்த விவாதத்தை மீண்டுமாகச் சூடாக்கியுள்ளதோடு, அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.