ஊழல்வாதிகளுக்குத்தான் பாதுகாப்பு இல்லை – அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி தாக்கு!

வரும் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பிரதான திராவிடக் கட்சிகளும் ஒரே கூட்டணியில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் மிக காரசாரமான குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தற்போதைய தவெக ஆட்சியில் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார். “தமிழகத்தில் ஏழை, எளிய பொதுமக்களுக்குத் தலைசிறந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது; இங்கு யாருக்கு பாதுகாப்பு இல்லை என்றால், ஊழல்வாதிகளுக்கு மட்டும்தான் பாதுகாப்பு இல்லை” என்று மிக அதிரடியாகத் தெரிவித்தார்.

மேலும், தவெகவின் வலுவான அரசியல் வளர்ச்சியை எதிர்கொள்ள முடியாமல், பரம எதிரிகளாக இருந்த அதிமுகவும் திமுகவும் வரும் தேர்தலில் ஒரே கூட்டணியில் இணைந்தாலும் வியப்பதற்கில்லை எனக் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைத் தவிடுபொடியாக்கும் வகையிலும், திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் ஒரே நேர்கோட்டில் வைத்து அமைச்சர் நிர்மல்குமார் ஆற்றிய இந்தச் சூடான பேச்சு, தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment