தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் சுமார் ரூ.1020 கோடி அளவுக்குப் பிரம்மாண்ட டெண்டர் ஊழல் அரங்கேறியுள்ளதாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிரடியாக வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் அமலாக்கத்துறை வழங்கிய முக்கிய ஆவணங்கள் மற்றும் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட ஊழல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதற்கட்ட தகவல் அறிக்கையில் (FIR), முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, கே.என்.ரவிச்சந்திரன், கே.என்.மணிவண்ணன் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் உட்பட மொத்தம் 12 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், லஞ்ச ஒழிப்புத்துறையால் கே.என்.நேரு மற்றும் அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் மீது இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் சூடான விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.