“கூச்சல் குழப்பம் தவறு!”: சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களுக்குச் சபாநாயகர் பிரபாகர் கண்டிப்பு!

தமிழகச் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற அமளிதுளிக்கு இடையே, எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்களின் நடவடிக்கைகளுக்குச் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்துப் பேசிய சபாநாயகர், “சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பல்வேறு கேள்விகளுக்கும் புகார்களுக்கும் முதலமைச்சர் விஜய் இன்று மிகத் தெளிவாக ஆதாரப்பூர்வமாகப் பதிலளித்தார்.

ஆனால், முதலமைச்சர் அவையில் பேசும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல் குழப்பம் விளைவித்தது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும்.

அதுமட்டுமின்றி, அவையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் இதுபோன்ற போஸ்டர்களைக் கொண்டுவந்து காட்டுவதும் தவறான செயலாகும்” என்று கூறி திமுகவினருக்குத் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்தார்.

முதலமைச்சரின் பதிலுரையைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து போஸ்டர்களைக் காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, பின்னர் வெளிநடப்பும் செய்தனர். இந்தச் சூழலில், பேரவையின் விதமுறைகளையும் மரபுகளையும் சுட்டிக்காட்டி சபாநாயகர் பிரபாகர் ஆற்றியுள்ள இந்த கண்டிப்பான உரை, சட்டமன்ற வளாகத்தில் மேலும் பரப்பரப்பைக் கூட்டியுள்ளது.

Leave a Comment