தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணியின் பெயர் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில், சென்னை பனையூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் வருகை தந்துள்ளார்.
தவெகவின் 2-வது தோழமைக் கட்சிகள் பங்கேற்கும் இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக, இக்கூட்டத்தில் பங்கேற்க இடதுசாரிகள் மறுப்பு தெரிவித்த நிலையில், காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட முக்கிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் தொகுதிப் பங்கீடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வரும் இக்கூட்டத்தின் இறுதியில், தவெக தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
சட்டப்பேரவையில் சர்க்காரியா கமிஷன் விவகாரம், திமுக எம்.எல்.ஏ-க்கள் அவைக் காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றம், இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு மற்றும் வரும் 12-ம் தேதி திமுக அறிவித்துள்ள மாநில தழுவிய போராட்டம் எனத் தமிழக அரசியல் களம் கொதிநிலையை அடைந்துள்ள சூழலில், பனையூரில் நடைபெறும் இந்தத் தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய கூட்டணிப் பெயர் அறிவிப்பு மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.