குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து கட்டா குஸ்தி ஐஸ்வர்யா லட்சுமியின் அதிரடி ஓப்பந்தம்!

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லட்சுமி, திருமணம் மற்றும் தாய்மை (Motherhood) குறித்துப் பகிர்ந்துள்ள சில அதிரடியான கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. “திருமணம் என்ற அமைப்பிற்குள் நுழைவதை விட, பரஸ்பர நம்பிக்கையே எனக்கு மிகவும் முக்கியம்” என்று அவர் தனது பேட்டியில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

சமூகத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ‘திருமணம்’ என்ற முறை மற்றும் அதன் கட்டமைப்புக்குள் நுழைவதில் தனக்கு இன்னும் பல தயக்கங்களும், மன ரீதியான சிக்கல்களும் நீடித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், அவசரப்பட்டுத் திருமண வாழ்க்கைக்குள் தடம் பதிக்கத் தான் தயாராக இல்லை என்பதையும் அவர் தனது கருத்துக்கள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இருப்பினும், தான் நடித்து வரும் திரைப்படப் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட ஒரு சுவாரசியமான அனுபவம், தனக்குள் இருக்கும் தாய்மை உணர்வை (Motherhood Instinct) எப்படித் தூண்டியது என்பது குறித்தும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அந்த உணர்வு தான் அவரைப் பிற்கால வாழ்க்கை மற்றும் குழந்தை பிறப்பு குறித்த அடுத்தகட்ட சிந்தனைக்கு இட்டுச் சென்றுள்ளது.

‘கட்டா குஸ்தி 2’ படப்பிடிப்பில் நடந்த மாற்றம்:

அண்மையில் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு குழந்தையுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாக ஐஸ்வர்யா லட்சுமி குறிப்பிட்டுள்ளார். அந்த குழந்தையுடன் செலவிட்ட தருணங்கள் தான், என்னுள் தூங்கிக் கொண்டிருந்த உன்னதமான தாய்மை உணர்வை முதன்முதலாக விழித்துக்கொள்ளச் செய்தது என்று அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே, பிற்காலத்தில் எனக்காக வரப்போகும் என் துணையைத் தேர்ந்தெடுப்பதில் எனக்கு ஒரு தெளிவு பிறந்துள்ளது. எனக்காக வருபவர் ஒரு நல்ல தந்தையாக இருப்பார், எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் என்னை விட்டு விலகிப் போக மாட்டார் என்று குறைந்தபட்சம் நான் நம்பக்கூடிய ஒருவருடன் மட்டுமே இணைந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புகிறேன் என்று தனது முடிவை அறிவித்துள்ளார்.

திருமணம் என்ற சட்டபூர்வ பந்தத்தை விட, இரு மனங்களுக்கு இடையே இருக்கும் ஆழமான நேர்மையும், பிரியாத நம்பிக்கையும் தான் ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு மிக முக்கியத் தேவை என்ற ஐஸ்வர்யா லட்சுமியின் இந்த முற்போக்கான பார்வை, தற்போது இணையவாசிகளிடையே பலதரப்பட்ட கருத்துக்களுடன் வைரலாகி வருகிறது.

Leave a Comment