“தவெக கட்சி கொடி நிறத்தில் புதிய அரசு பேருந்துகள்!”: தமிழகப் போக்குவரத்துக் கழகத்தின் புதிய வண்ண வடிவமைப்பு சமூக வலைதளங்களில் வைரல்!

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிதாகக் களமிறக்கப்படவுள்ள அரசுப் பேருந்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கட்சி கொடி நிறங்களான சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த புதிய வண்ண வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காகப் புதுப்பொலிவுடன் தயாராகி வரும் இந்த புதிய ரகப் பேருந்துகளின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகித் தீயாகப் பரவி வருகின்றன. ஆளுங்கட்சியின் அடையாள வண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் பேருந்துகளின் வண்ணம் மாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இது நவீன தொழில்நுட்பப் பொலிவுடனும், பயணிகளின் கவனத்தைக் கவரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத்துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுப் போக்குவரத்தைச் சீரமைக்கவும், பயணிகளுக்குப் புதிய அனுபவத்தை வழங்கவும் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த வண்ண மாற்றம் பார்க்கப்பட்டாலும், தவெக கொடியின் சாயலில் பேருந்துகள் காட்சியளிப்பது அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment