மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர்ப் பதற்றங்களைத் தணித்து, மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவிற்கு ஈரான் பல முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
முதற்கட்டமாக, ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா உடனடியாக நிறுாத்த வேண்டும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஈரானை ஒட்டியுள்ள முக்கியத் துறைமுகங்கள் மற்றும் கடற்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவப் படைகளை முழுமையாகத் திரும்ப அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.
இதுமட்டுமின்றி, சர்வதேசப் பொருளாதாரத் தடைகள் மற்றும் நடவடிக்கைகளால் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான அத்தியாவசிய நிதி மற்றும் வருவாயை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்தத் தீர்க்கமான நகர்வு, அமெரிக்க நிர்வாகத்திற்குப் புதிய தூதரக நெருக்குதலை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் பிராந்திய அமைதியை இது எவ்வாறு பாதிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
போரை நிறுத்துவதற்கான முதன்மைப் புள்ளியாகத் தனது நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ள சூழலில், அமெரிக்காவின் அடுத்தகட்ட எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை உலக நாடுகள் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.