முதலமைச்சர் விஜயின் லண்டன் சுற்றுப்பயணம் தேவையற்ற ஒன்று என்றும், முதலீடுகளை ஈர்க்க லண்டனுக்குச் சென்றிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “லண்டனுக்குப் பெரிய கூட்டத்தைச் கூட்டிக் கொண்டு போய், அவர் ஒருவரைச் சந்தித்தார், இவர் எட்டிப் பார்த்தார்; எதுக்கு இந்த வேலை எல்லாம்? இதெல்லாம் தேவையில்லாத அரசியல்” என்று விமர்சித்தார்.
மேலும், “நான் யாரையும் காயப்படுத்துவதற்காகக் குறிப்பிடவில்லை. முதல்வர் லண்டனுக்குப் போனதைப் பற்றியே பேச நான் விரும்பவில்லை; அவர் லண்டனுக்கே போயிருக்கக் கூடாது என்றுதான் பேசுகிறேன்” எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
லண்டனில் தற்போது பொருளாதாரச் சூழல் சரியில்லை என்றும், அங்கு முதலீடு செய்வதற்குப் பணமும் இல்லை என்றும் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, அதையெல்லாம் விட்டுவிட்டு இந்தியாவிலேயே உள்ள முன்னணி தொழிலதிபர்களிடம் பேசி மாநிலத்திற்கான முதலீடுகளை எளிதாக ஈர்த்திருக்க முடியும் என்றும் கருத்துத் தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதாக ஆளும் தவெக அரசு கூறி வரும் வேளையில், அண்ணாமலையின் இந்த நிதர்சனமான விமர்சனம் அரசியல் களம் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் உண்மைத் தன்மையையும், அதனால் கிடைக்கும் உண்மையான பலன்களையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்த அண்ணாமலையின் இந்தப் பேச்சு, தவெக அரசுக்கு மற்றுமொரு அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.