ரூ.299-க்கு ஜியோ 4G போன்! – ஜியோவின் 10-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அசத்தல் சலுகை அறிவிப்பு!

தொலைத்தொடர்புத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது 10-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான சலுகை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் 2G நெட்வொர்க்கைப் பயன்படுத்துபவர்களை 4G நெட்வொர்க்கிற்கு மாற்றும் நோக்கில் “JioBharat V2 4G Phone” சிறப்பு விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சலுகையின் படி, JioBharat 4G போன் ரூபாய் 1,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் 6 மாத இலவச ரீசார்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த 6 மாத ரீசார்ஜின் மதிப்பு ரூபாய் 1,200 ஆகும். இதன் மூலம், ரீசார்ஜ் தொகையைக் கழித்துப் பார்க்கும் போது, இந்த 4G ஸ்மார்ட் போனின் உண்மையான விலை (Effective Price) வெறும் ரூபாய் 299 மட்டுமே ஆகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த JioBharat V2 4G போனில் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் (Unlimited Calls) மற்றும் மாதம் 14GB டேட்டா உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு ஜியோபே (JioPay) மற்றும் பொழுதுபோக்கிற்கு ஜியோசினிமா (JioCinema), ஜியோசாவ்ன் (JioSaavn) போன்ற செயலிகளையும் எளிதாகப் பயன்படுத்த முடியும்.

மொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சலுகை, எளிய மக்கள் மற்றும் 2G போன் பயன்படுத்துவோர் இடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜியோ நிறுவனத்தின் இந்த 10-வது ஆண்டு நிறைவு சலுகை டிஜிட்டல் இந்தியாவை நோக்கி அடுத்தகட்டப் பாய்ச்சலாக இருக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment