தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் கருத்து மோதல்கள் நிலவி வரும் சூழலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அம்மாமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அரசின் அறிவிப்புகளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “அன்னபூரணி திட்டத்தில் 6 விலையில்லா சிலிண்டர்கள் தருவேன் என்று முதலமைச்சர் விஜய் கூறினார். ஆனால் இப்போது 3 சிலிண்டர்கள் தருவேன், அதுவும் பொங்கலுக்குத் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார்” எனச் சாடினார்.
தொடர்ந்து ஆட்சியின் ஸ்திரத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய அவர், “அதுவரை இந்த ஆட்சி இருக்குமா என்று தெரியவில்லை. பேரம் பேசி எங்கள் எம்.எல்.ஏ.க்களைத் தடம் மாற வைத்தார். தவெக எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் உங்கள் காலை வாரி விடுவார்கள்; இது நடப்பது நிச்சயம்” என்று மிகக் காட்டமாகத் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகை வரை இந்த அரசு நீடிக்குமா என்ற கேள்வியையும், எம்.எல்.ஏ.க்கள் தடம் மாறுவார்கள் என்ற எச்சரிக்கையையும் டிடிவி தினகரன் பகிரங்கமாக எழுப்பியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.