ஹெலிகாப்டரில் வருகை தரும் முதல்வர் விஜய்! – தாராபுரம் பிரசாரத்தில் மூலனூர் வஞ்சியம்மன் கோவில் வழிபாடு? பரபரக்கும் தகவல்கள்!

தமிழக அரசியல் களத்தில் தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய்யின் பிரசாரப் பயணம் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

வெளியாகியுள்ள தகவல்களின்படி, முதல்வர் விஜய் கோவையிலிருந்து தாராபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாகப் பயணம் செய்யவுள்ளார். தாராபுரம் பிரசார மேடைக்கு அருகாமையில் அமைப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்கும் அவர், அங்கிருந்து நேரடியாகப் பிரசாரக் களத்திற்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மாருதி நகரிலிருந்து மூலனூர் வரை சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலை மார்க்கமாக (Road Show) பிரசாரம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.

மக்களின் வீட்டு வாசலுக்கே சென்று நேரடியாக வாக்கு சேகரிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வரும் முதல்வர் விஜய்யின் இந்த நடவடிக்கை, இந்த இடைத்தேர்தலில் தவெகவின் வெற்றியை உறுதி செய்யும் முக்கியப் பிரசார யுக்தியாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், மூலனூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வஞ்சியம்மன் கோவிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு நடத்த வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோவில் அந்தத் தொகுதியில் உள்ள குறிப்பிட்ட சமுதாய மக்களிடையே மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஹெலிகாப்டர் பயணம், 30 கி.மீ பிரம்மாண்ட ரோடு ஷோ மற்றும் மூலனூர் வஞ்சியம்மன் கோவில் வழிபாடு எனத் திட்டமிடப்பட்டுள்ள முதல்வர் விஜய்யின் இந்த அதிரடிப் பிரசாரத் திட்டம், தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் பெரும் அரசியல் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

Leave a Comment