தமிழக அரசு ரேஷன் கடைகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்வதில் பெரும் சாதனை படைத்துள்ளது. தவெக அரசு துவரம் பருப்பு கொள்முதலில் மேற்கொண்ட வெளிப்படையான நடவடிக்கைகள் மூலம் மாநில அரசுக்கு மிகப்பெரிய அளவிலான நிதிச் சேமிப்பு கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் சுமார் 60,000 டன் துவரம் பருப்பு ரேஷன் கடைகளுக்காகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்முதலில் முந்தைய திமுக ஆட்சியின் விலையோடு ஒப்பிடும்போது 29 சதவீதம் (29%) குறைந்த விலைக்குப் பருப்பு வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகது.
திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.109-க்குக் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போதைய தவெக அரசு ஒரு கிலோ துவரம் பருப்பை ரூ.77.89-க்கு (சுமார் ரூ.77) கொள்முதல் செய்துள்ளது. இந்த விலை குறைப்பின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மாநில அரசுக்கு ரூ.187.56 கோடி நிருபணமான சேமிப்பு (Savings) கிடைத்துள்ளது.
பொதுமக்களுக்குத் தரமான பொருட்களை சரியான விலையில் வழங்குவதிலும், மாநிலத்தின் நிதி நிர்வாகத்தை திறம்படக் கையாள்வதிலும் தவெக அரசு காட்டி வரும் இந்தச் சாதனை, மக்கள் மத்தியிலும் நிர்வாக வட்டாரத்திலும் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. ரேஷன் பொருட்கள் கொள்முதலில் கிடைத்துள்ள இந்த ரூ.187.56 கோடி சேமிப்பு, அரசுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.