பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைக்க கோவை செல்லும் முதல்வர் விஜய்: 11.4 கி.மீ பிரம்மாண்ட ரோட் ஷோ!

பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் விஜய் கோவைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அங்கு அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையத்தில் தொடங்கி காந்திபுரம் வரை சுமார் 11.4 கிலோமீட்டர் தூரத்திற்கு முதல்வர் விஜய் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட ரோட் ஷோ (Road Show) நடைபெறவுள்ளது. இந்த ரோட் ஷோ பயணம் அவினாசி சாலை, காமராஜர் சாலை சந்திப்பு, லட்சுமி மில்ஸ் சந்திப்பு மற்றும் எல்.ஐ.சி சந்திப்பு வழியாகச் செல்லும் வகையில் பாதை திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்வரின் இந்த கோவை வருகையையும், 11.4 கி.மீ தூர ரோட் ஷோ நிகழ்வையும் முன்னிட்டு தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ரோட் ஷோ செல்லும் பாதையெங்கும் உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கோவைக்குச் செல்லும் முதல்வர் விஜய்யின் இந்த முக்கியப் பயணமும், பெரியார் அறிவகத் திறப்பு விழாவும் அரசியல் களத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment