தேவாவிற்கு அரசு மரியாதை: தமிழ்நாடு அரசு சார்பில் முக்கிய அறிவிப்பு!

தென்னிந்தியத் திரையுலகில் ‘தேனிசைத் தென்றல்’ என்று அன்போடு அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா ஆற்றிய அளப்பரிய இசைப் பணிகளைக் கெளரவிக்கும் விதமாக, அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான கானா பாடல்கள் மற்றும் மெல்லிசைப் பாடல்கள் மூலம் ஒட்டுமொத்த மக்களின் இதயங்களிலும் நீங்காத இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் தேவா. இவரது மறைவு திரைத்துறையினரையும், உலகெங்கிலும் உள்ள இசைப் பிரியர்களையும் ஆழந்த துயரத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

அவர் தமிழ் சினிமாவுக்கு அளித்த மாபெரும் பங்களிப்பையும் கலைப் பணிகளையும் சிறப்பிக்கும் வகையில், இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

திரைப்படக் கலைஞர்கள், இசை அமைப்பாளர்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் தேவாவின் மறைவுக்கு நேரில் சென்றும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.

அவரது இறுதிச்சடங்கு அதிகாரப்பூர்வ அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளது என்பது, அவரது இசைப்பயணத்திற்கும் கலைஞர்களுக்கும் அரசு அளிக்கும் மிக உயரிய கெளரவமாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Comment