தமிழகத்தில் வளிமண்டலக் மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவமழை காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களிலும் வட மாவட்டங்களிலும் இரவோடு இரவாக மழை தீவிரமடைந்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், தொடர் மழை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று (அக்டோபர் 22) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கனமழையின் காரணமாகச் சாலைகளில் நீர் தேங்கியுள்ளதாலும், போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாலும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்தடுத்து மழை நீடிக்கும் பட்சத்தில் நிலைமையைக் கண்காணித்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. திடீரென அறிவிக்கப்பட்ட இந்த விடுமுறைச் செய்தி பெற்றோர் மற்றும் மாணவர்கள் இடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.