பால்கன் பகுதியில் உள்ள ஒரு நிலப்பரப்பைக் கோரி, தனக்கென ஒரு தனி நாட்டை உருவாக்கி அதன் அதிபராக அறிவித்துக்கொண்ட பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த டேனியல் ஜாக்சன் (Daniel Jackson) என்ற 21 வயது இளைஞருக்கு, ஐக்கிய நாடுகள் சபை (UN) விருது வழங்கி கௌரவித்துள்ளது சர்வதேச அளவில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டேனியல், தனது 14 வயதிலேயே நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக ஒரு நாட்டை உருவாக்கும் யோசனையைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, அந்த நிலப்பரப்பில் தனது சொந்த நாட்டை நிறுவி அதன் அதிபராகச் செயல்பட்டு வந்த அவர், அந்நாட்டின் மூலம் பல்வேறு மனிதாபிமான உதவிகள் மற்றும் தன்னார்வத் தொண்டுகளை முன்னெடுத்து வந்தார்.
அவர் செய்து வரும் சமூக நலப் பணிகள் மற்றும் தொண்டுகளைக் அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை அவருக்கு இந்த உயரிய விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளது. சிறு வயதில் ஒரு யோசனையாகத் தொடங்கி, இன்று ஐ.நா. அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்த இளைஞரின் சாதனை உலகளவில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.