விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து!

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணை முறைப்படி வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தன.

அரசின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையின் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள 92,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் சட்டப் போராட்டங்களிலிருந்தும், வழக்குகளிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட நாட்களாகத் தங்களை அச்சுறுத்தி வந்த வழக்குகளிலிருந்து விடுபட்டுள்ளதால், ஆசிரியர் சங்கங்களும் விவசாய அமைப்புகளும் முதலமைச்சர் விஜய்க்குத் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பு விவசாயிகள் மற்றும் ஆசிரியர் குடும்பங்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment