சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் சென்னை அமலாக்கத்துறை (ED) அலுவலகத்தில் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2016-2021 காலகட்டத்திலான வங்கி பணப்பரிவர்த்தனைகள் குறித்தும், முன்னதாக அமலாக்கத்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையிலும் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல மணி நேரம் நீடித்த இந்த தீவிர விசாரணையால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த கட்டங்களாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படப் போகின்றன என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.