14 வருஷத்துக்கு அப்புறம் செம கெத்தாக வரும் சூர்யா.. Vishwanath & Sons கதை இப்படி தான் இருக்கும்!

‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’ போன்ற தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த கனமான மற்றும் பரிசோதனை முயற்சித் திரைப்படங்களுக்குப் பிறகு, நடிகர் சூர்யா முற்றிலும் மாறுபட்ட ஒரு குடும்பக் கதைக் களத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது திரையுலகில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘VishwanathAndSons’ திரைப்படம் ஒரு நடுவயது நபருக்கும், ஒரு இளம் பெண்ணிற்கும் இடையே இருக்கும் அழகான பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.

இத்திரைப்படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி, முதலில் தான் சூர்யாவிற்கு ஒரு ‘பயோபிக்’ (Biopic) கதையைத்தான் விவரித்ததாகக் கூறினார். அந்த பயோபிக் கதையைக் கேட்ட சூர்யா மிகவும் உற்சாகமடைந்து நடிக்க விருப்பம் தெரிவித்தபோதிலும், படத்தின் காப்பிரைட்ஸ் (Rights issue) தொடர்பான விஷயங்களில் தெளிவு கிடைக்காமல் தாமதமானது.

ஏற்கனவே ‘சூரரைப் போற்று’ மற்றும் ‘ஜெய் பீம்’ எனத் தொடர்ந்து பயோபிக் மற்றும் உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்ட படங்களில் நடித்திருந்ததால், சூர்யா அவரிடம் ஒரு விருப்பத்தை முன்வைத்துள்ளார். “வெங்கி, உன்னிடம் ஏதேனும் இலகுவான, அழகான ஒரு லவ் அண்ட் பேமிலி சப்ஜெக்ட் (Breezy Film) இருக்கிறதா? சுமார் 14 வருடங்களாக நான் இதுபோன்ற காதல் திரைப்படங்களில் நடித்து வெகுநாட்களாகிவிட்டது” என்று சூர்யா கேட்டுள்ளார்.

கண்ணீர் விட்ட ராஜசேகர் பாண்டியன்: ஏப்ரலில் கதைகேட்டு ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு!

இதனைத் தொடர்ந்து, ஒரு 40 வயது நபருக்கும் 20 வயது பெண்ணிற்கும் இடையே நடக்கும் ஒரு அழகான உணர்வுப்பூர்வமான கதைக் கருவை போன் மூலமாக வெங்கி அட்லூரி கூறியுள்ளார். கதையின் கரு பிடித்திருந்ததால், 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ராஜசேகர் பாண்டியன் (2D Raja) முழு கதையையும் கேட்க அழைத்துள்ளார். சென்னையில் முழுக் கதையையும் கேட்ட ராஜசேகர் பாண்டியன், கதையின் கிளைமாக்ஸ் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளைக் கேட்டு நெகிழ்ந்து கண்ணீர் சிந்தியுள்ளார்.

உடனடியாகச் சூர்யாவிற்கு போன் செய்த ராஜசேகர் பாண்டியன், “பா, இது ரொம்பவே அழகான கதை… கண்டிப்பா நாம இதை பண்ணனும்” என்று கூறியுள்ளார். அதன் பிறகு சூர்யாவிற்கு முழுக் கதையும் விவரிக்கப்பட, முதல் நரேஷனிலேயே கதை அவருக்கு மிகவும் பிடித்துப்போய் உடனடியாக நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் இந்த கதை விவாதம் நடந்த நிலையில், அடுத்த இரண்டு மாதங்களிலேயே அதாவது 2025 ஜூன் மாதத்திலேயே படத்தின் படப்பிடிப்பு மிக விரைவாகத் தொடங்கப்பட்டது. எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையாகத் தொடங்கப்பட்ட இத்திரைப்படம், சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு உணர்வுப்பூர்வமான மற்றும் மறக்க முடியாத குடும்பத் திரைப்படமாக அமையும் என இயக்குநர் வெங்கி அட்லூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Comment