சட்டமன்றப் பேரவையில் அசத்தும் பெண் தலைவர்கள்: சௌமியா அன்புமணி மற்றும் பிரேமலதா விஜயகாந்துக்கு குவியும் வாழ்த்துகள்!

தமிழக சட்டமன்றப் பேரவையில் மக்கள் நலன் சார்ந்த விவாதங்களில் பங்கேற்றுத் தங்களது ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் துல்லியமாக முன்வைத்து வரும் பாமக தலைவர் சௌமியா அன்புமணி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இரு பெண் தலைவர்களுக்கும் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

“இவர்களெல்லாம் எம்.எல்.ஏ ஆகி என்னத்தைச் கிழிக்கப் போறாங்க?” என்ற ஆணாதிக்க வினாக்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மாண்போடும் மரியாதையோடும் சட்டமன்ற மாபெரும் சபையில் தங்களது கருத்துச் செறிவை இருவரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

சட்டமன்றப் பேரவை கூடும்போதெல்லாம், நூற்றுக்கணக்கான ஆண் உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் மன்றத்தில் தங்களின் அறிவுப்பூர்வமான வாதங்களாலும், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான வலிமையான குரலாலும் அவையின் கவனத்தை மொத்தமாக ஈர்த்து ‘வின்னர்’ மற்றும் ‘ரன்னர்’ இடத்தை இவர்கள் தட்டிச் செல்கின்றனர்.

குறிப்பாகத் தொகுதி மக்களின் குடிநீர், சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் மிகத் தெளிவாக முன்வைக்கும் இவர்களின் அணுகுமுறை சட்டமன்றப் ஜனநாயகத்தின் மாண்பை மேலும் உயர்த்தியுள்ளது. அரசியல் எல்லைகளைத் தாண்டி பெண் தலைவர்களின் இந்தச் சிறப்பான செயல்பாட்டிற்குத் தமிழக மக்கள் “வாழ்த்துகள் அக்காஸ்! வாழ்க!!” எனத் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment