வாக்காளர் பட்டியலில் அதிரடி நீக்கம்: 16 மாநிலங்களில் 1.5 கோடி போலி வாக்காளர்கள் வெளியற்றம்!

நாடு முழுவதும் ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப் உட்பட 16 முக்கிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை முறைப்படுத்தும் SIR (Special Intensive Revision) பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த விரிவான சரிபார்ப்பு நடவடிக்கையின் மூலம், இதுவரை சுமார் 1.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டைப் பதிவுகள், உயிரிழந்த வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் நிரந்தரமாக முகவரி மாறிச் சென்றவர்களின் விவரங்களைக் கண்டறிந்து நீக்கும் நோக்கிலேயே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தீவிரச் சரிபார்ப்பு நடத்தப்படும் 16 மாநிலங்களில், இதுவரை 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

எஞ்சியுள்ள 4 மாநிலங்களிலும் இறுதிப் பணிகள் மிக வேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. போலி வாக்காளர்களை அகற்றி, நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தலை உறுதி செய்வதற்காகத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, தேர்தல் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Leave a Comment