சமூக வலைதளங்களிலும் யூடியூப் சேனல்களிலும் சமீபகாலமாகத் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் சர்ச்சை குறித்து மூத்த நடிகை விஜயலட்சுமி மிகவும் காட்டமாகத் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். “த்ரிஷாவின் பெயரைப் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் தேவையில்லாமல் 24 மணி நேரமும் என்னுடைய பெயரையும் இழுத்து வம்புக்கு இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எதிராளியை நாம் 5 அடி அடிக்கும் போது, அவன் பதிலுக்கு ஒரு அடி கூட அடிக்காமல் சும்மா இருப்பானா? த்ரிஷாவைக் குறிப்பிடும் இடங்களில் விஜயலட்சுமி என்று தவறாகச் சொல்லிட்டா அடுத்து என்ன நடக்கும் என்று சிறிதாவது சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “அப்படி யோசித்துச் செயல்படும் அளவுக்குச் சிந்தனை அறிவு அவர்களுக்கு இல்லை. அதனால் தான் வேறு வழியின்றி இப்போது நானே நேரடியாகக் களத்தில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் பார்க்கும்போது அசிங்கமாகவும் கேவலமாகவும் இல்லையா? சமூகத்தில் நடக்கும் இந்த மாதிரியான அவதூறுகளையும் வீண் வம்புகளையும் பார்த்து மக்கள் காரித் துப்ப மாட்டார்களா?” என்று மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
த்ரிஷா தொடர்பிலான விவாதங்களில் தனது பெயரைத் தவறாக இணைத்து உலா வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட இந்த காரசாரமான பேச்சு தற்போது இணையதளங்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.