உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமும் பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமுமாக விளங்கும்திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்குள்பக்தர்கள் செல்போன்களை எடுத்துச் செல்லவரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல்முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைஆணையரின் சுற்றறிக்கையின்படி, திருக்கோயிலின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்கள் எந்தவித இடையூறுமின்றி அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்வதை உறுதி செய்யவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்களது அலைபேசிகளைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லும் வகையில்,கிழக்கு ராஜகோபுரம் அருகே இரண்டு இடங்கள்,வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகே இரண்டு இடங்கள்மற்றும்தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகே ஒரு இடம்என மொத்தம்5 முக்கிய இடங்களில் பிரத்யேகப் பாதுகாப்பு மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. இங்குப் பக்தர்கள்ரூ.5 கட்டணமாகச் செலுத்தித் தங்களது செல்போன்களை ஒப்படைத்துவிட்டுத் தகுந்த டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
தரிசனம் முடிந்த பிறகு அந்தத் டோக்கனைக் காண்பித்துத் தங்களின் செல்போன்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் வளாகத்திற்குள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சமூக வலைதள ரீல்ஸ்கள் எடுப்பதைத் தவிர்க்கவும், பாதுகாப்பு அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கவும் கோயில் இணை ஆணையர் பரணிதரன் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் புதிய கட்டுப்பாட்டு உத்தரவு ஆன்மிக அன்பர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.