முதலமைச்சர் விஜய்யின் கார் பயன்பாடு மற்றும் தவெகவினரின் கோரிக்கைகள் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் சிறுவயது முதலே தங்களுக்கு அவரைப் பற்றி நன்றாகத் தெரியும் என்றும், அவர் எப்போதுமே ஒரு கார் பிரியர் என்றும் சுட்டிக்காட்டி அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், “சிறு வயதில் இருந்து முதல்வர் விஜயை எங்களுக்குத் தெரியும். அவர் எப்பவுமே ஒரு கார் பிரியர். தவெகவினர் கேட்டுக் கொண்டதால் தான் கார் அறிவிச்சு இருக்கார். இல்லாதவங்களுக்கு கார் கொடுக்கலாம், அது வரவேற்கத்தக்கது. நிறைய பேருக்கு கார் இருக்கு. ஏன் வெளிநாட்டு கார் கூட வச்சு இருக்காங்க..” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
விஜய்யின் நடவடிக்கை குறித்து எழும் விமர்சனங்களுக்கு இடையே, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ள இந்த ஆதரவான கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.