“இந்த ஆண்டே…”: மும்மொழிக் கொள்கை அமலாக்கத்தை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

மும்மொழிக் கொள்கையை இந்த ஆண்டே அமல்படுத்துவது தொடர்பாக எழுந்துள்ள வழக்க விசாரணை உச்சநீதிமன்றத்தில் தீவிரமடைந்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குவது தொடர்பான நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் மிக முக்கியமான அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, இந்த நடப்பு ஆண்டிலேயே மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது குறித்த முடிவை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் அமைப்புகளும் உரிய ஆலோசனை நடத்தி, இன்னும் 10 நாட்களுக்குள் தங்களின் தெளிவான பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

அவசர அவசரமாக நடைமுறைப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் கல்விச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

மும்மொழிக் கொள்கை அமலாக்கம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த 10 நாள் கெடு மற்றும் மறுபரிசீலனை உத்தரவு, கல்வித் துறையிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment