“ஒரு ஜோசியக்காரன் சொன்னால்தான் பார்ப்பீர்களா?”: சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் காரசாரம்!

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளும் சாடல்களும் அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அரசின் செயல்பாடுகள் மற்றும் கோப்புகள் தேங்கிக் கிடப்பது குறித்து அவர் தனது உரையில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

முன்பு முதலமைச்சர் பேசும்போது, “டேபிள் முன்பு இருக்கும் ஃபைல்களைத் திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின், “அந்த ஃபைல்களைத் திறந்து பார்த்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும் தனது உரையைத் தொடர்ந்த அவர், “அந்த ஃபைல்களைத் திறந்து பார்க்க ஒரு ஜோசியக்காரன் வந்து சொன்னால்தான் பார்ப்பீர்களா?” என்று மிகக் காரசாரமாகவும் நக்கலாகவும் கேள்விகளை எழுப்பினார்.

மக்கள் நலன் சார்ந்த முடிவுகளையும் முக்கியக் கோப்புகளையும் விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்காமல் அரசு காலதாமதம் செய்வதாகக் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இந்த அதிரடி உரை, சட்டமன்றப் பேரவையில் சூடான விவாதத்தைக் கிளப்பியதோடு, மாநில அரசியல் களம் மற்றும் சமூக வலைதளங்களிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Leave a Comment