“10 Years of UPI..!”: இந்தியாவில் யுபிஐ சேவை அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவு – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை புரட்சியில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை சேவை (UPI) அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி குறித்துப் பேசிய பிரதமர் மோடி, UPI சேவை தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் ஒட்டுமொத்தமாக ஒரு கோடியே 80 லட்சம் பரிவர்த்தனைகள் மட்டுமே நடைபெற்ற நிலையைச் சுட்டிக்காட்டினார். ஆனால், தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் பேராதரவு காரணமாகத் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 76 கோடி பரிவர்த்தனைகள் என்ற பிரம்மாண்டமான அளவை எட்டி UPI சாதனை படைத்துள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சாமானிய தெருவோர வியாபாரிகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை அனைவரும் மிக எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைமுறை உருவெடுத்துள்ளது.

இந்தியாவின் இந்தத் தொழில்நுட்பப் பாய்ச்சல் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், யுபிஐ சேவையின் 10 ஆண்டு காலப் பயணம் நாட்டின் பொருளாதார வெளிப்படைத்தன்மைக்கும் டிஜிட்டல் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய தூணாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment