திமுக செயற்குழு கூட்டம் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிலையில், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் உரையாற்றிய தலைவர் மு.க.ஸ்டாலின், “போர் அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல நாம்; போராட வந்தவர்கள்” எனக் தொண்டர்களிடையே ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும், “கம்பேக் கொடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட்டான நாம், திரும்ப வருவோம்; வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்!” என்று அரசியல் களத்தில் எழுச்சியுடன் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் வகையில் கட்சி நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் உள்ளிட்ட பல முக்கிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
திமுகவை அடிமட்ட அளவில் இருந்து மறுசீரமைத்து, தொண்டர்களின் உழைப்போடு வீரியமாக களமிறங்க தலைமை திட்டமிட்டுள்ளது. சவால்களை எதிர்கொண்டு மீண்டும் அரசியல் களத்தில் கம்பேக் கொடுப்போம் என்ற ஸ்டாலினின் இந்த அதிரடி உரை, திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தையும் புது நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.