“ஊழல் செய்தால் மரண தண்டனை..!”: CM விஜய்க்கு ஸ்ரீதர் வேம்பு அதிரடி ஆலோசனை!

தமிழகத்தின் நிர்வாகத் திறனை உயர்த்தவும், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை உறுதி செய்யவும் சோஹோ (Zoho) நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு முக்கியப் பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார்.

முக்கியக் குற்றங்களைத் தடுப்பது குறித்துப் பேசிய ஸ்ரீதர் வேம்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஊழல் போன்ற கடுமையான குற்றங்களைக் கட்டுப்படுத்தச் சிங்கப்பூரின் கடுமையான சட்டங்களைப் பரிசீலிக்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு அதிகாரிகளின் நேர்மையை உறுதி செய்ய ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளின் சம்பளம் கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் எனவும், பழைய ஊழல் வழக்குகளுக்குப் பொதுமன்னிப்பு அளிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இதையெல்லாம் மீறி மீண்டும் ஊழல் மற்றும் தவறுகளில் ஈடுபடுபவர்களுக்கு மிகக் கடுமையான மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதோடு, நீதி விசாரணை முறைகள் 30 ஆண்டுகள் வரை தாமதமாகக் கூடாது எனக் சுட்டிக்காட்டிய அவர், சிங்கப்பூர் நீதிமன்றங்களைப் போல மிக விரைவாகவும் திறமையாகவும் செயல்பட நம்மூர் நீதித்துறை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய்க்கு ஸ்ரீதர் வேம்பு ஆலோசனை வழங்கியுள்ளார். தொழில் அதிபர் ஸ்ரீதர் வேம்புவின் இந்த அதிரடிப் பரிந்துரைகள் தமிழக நிர்வாக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

Leave a Comment