“அடுத்த பிரதமர் விஜய்!”: 2029-ல் தவெக 60 எம்பி-க்களை வெல்லும் – ஆஸ்தான ஜோதிடர் வெற்றிவேல் அதிரடி கணிப்பு!

இந்திய அரசியல் அரங்கிலும் தமிழக அரசியல் களத்திலும் புதுவிதமான விவாதங்களையும் அதிர்வலைகளையும் எழுப்பும் வகையில் ஜோதிட ரீதியிலான கணிப்பு ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் கணித்துள்ள தகவலின்படி, வரும் 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மிகப்பாரிய வெற்றியைப் பதிவு செய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

தென்னிந்திய மாநிலங்களில் ஒட்டுமொத்தமாகத் தவெக 60 நாடாளுமன்ற உறுப்பினர் (MP) இடங்களைக் கைப்பற்றி புதிய சாதனை படைக்கும் என்றும், இதன் மூலம் தவெக தலைவர் விஜய் தான் இந்தியாவின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பார் என்றும் அவர் கணித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியலில் தவெக தனது பயணத்தைத் தீவிரப்படுத்தி வரும் வேளையில், 2029 நாடாளுமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு ஆஸ்தான ஜோதிடர் வெற்றிவேல் வெளியிட்டுள்ள இந்த அதிரடி ஜோதிடக் கணிப்பு, தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. அதேசமயம், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பிற கட்சியினரிடையே இந்த விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment