“அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்!”: நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

சட்டமன்றத்தில் நிதிஅமைச்சர் மரியா வில்சன் பேசிய பேச்சு தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் அவர் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “தான் லஞ்சம் கொடுத்ததைச் சட்டமன்றத்தில் நிதிஅமைச்சர் மரியா வில்சன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். குறுக்கு வழியில் லஞ்சம் தந்து அனுமதி பெறும் வகையில், அவரது கல்வி நிறுவனத்தில் என்ன குறை உள்ளது?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து சாடிய அவர், “லஞ்சம் கொடுத்து காரியத்தை முடித்துக்கொள்ளும் குணநலம் கொண்டவராக மரியா வில்சன் உள்ளார். இவரை அமைச்சர் பதவியில் அமர்த்தினால், எப்படி அரசு இயந்திரம் நேர்மையாக இயங்கும்?” எனக் காட்டமாகக் குறிப்பிட்டார்.

மேலும், “லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்பதால், இந்த விவகாரத்தில் இரு தரப்பினர் மீதும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்” என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். அமைச்சரின் இந்தப் பேச்சு மற்றும் நயினார் நாகேந்திரனின் கடுமையான குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.

Leave a Comment