பிரபல நட்சத்திர நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ (Toxic) திரைப்படத்தின் காட்சிகள் மற்றும் சித்தரிப்புகள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தங்களின் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அண்ணாமலை, “நேற்று ஒரு படம் ரிலீஸ் ஆனது, இன்று காலை டிவியில் அதன் விமர்சனத்தைப் பார்த்தேன். ஒரு பெரிய நடிகர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 104 கோடி வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
ஆனால், பெண்களை மிகவும் தவறாகச் சித்தரித்து இந்த படத்தில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், “இப்படிப்பட்ட காட்சிகளை நம்முடைய குழந்தைகள் மற்றும் மாணவச் செல்வங்களைப் பார்க்க வைத்தால் நம்முடைய நாட்டில் பெண்களுடைய பாதுகாப்பு எப்படி இருக்கும்? இதையெல்லாம் பார்த்துக்கொண்டு தணிக்கைக் குழு (Censor Board) என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?” எனத் தணிக்கைக் குழுவின் செயல்பாடுகளைக் கடுமையான தொனியில் கேள்வி எழுப்பினார்.
அண்ணாமலையின் இந்த அதிரடிப் பேச்சு திரை உலகிலும் சமூக வலைதளங்களிலும் தற்பொழுது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.