“இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு!”: தவெக எம்.எல்.ஏ கருப்பையா பரபரப்பு பேச்சு – சோழவந்தான் தொகுதி கோரிக்கைகள் சட்டப்பேரவையில் முன்வைப்பு!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, தனது சோழவந்தான் தொகுதியின் முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துப்பேசியதுடன், ஜல்லிக்கட்டு மைதானம் குறித்துத் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

சட்டப்பேரவையில் பேசிய எம்.எல்.ஏ கருப்பையா, சோழவந்தான் தொகுதியில் அரசு கல்லூரி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் சர்க்கரை ஆலை அமைக்கப்பட வேண்டும் என்றும், நீர் ஆதாரங்களைப் பெருக்கும் வகையில் தொகுதிக்குட்பட்ட கண்மாய்களைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கும் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிக்கத் தேவையில்லை” என்று பரபரப்பான கருத்தைச் சட்டமன்றத்தில் பதிவிட்டார்.

பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக தவெக எம்.எல்.ஏ கருப்பையா பேசிய இந்த கருத்து, சட்டப்பேரவையிலும் சமூக வலைதளங்களிலும் தற்பொழுது காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Leave a Comment